Nandha Gopalasamy Hills Pollachi

You must need to login..!

Description

Nandha Gopalasamy Hills Pollachi *ஶ்ரீ நந்தகோபால் சுவாமிமலை*

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மலைமீது அமைந்துள்ள பழமையான ஸ்ரீநந்த கோபாலகிருஷ்ணன் மலைக்கோவில்.(கோபால்சாமி மலை) பொள்ளாச்சியிலிருந்து 20. கி.மீ. ,தூரத்தில், மஞ்சநாயக்கனூர், அங்கலக்குறிச்சி கிராமத்தையொட்டி மலைப்பகுதியில்,500ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கோபால்சாமிமலை , மூலவராக, சுயம்புவாகவும், ஸ்ரீருக்மணி, ஸ்ரீசத்யபாமா ஸ்ரீநந்தகோபால கிருஷ்ணன் காட்சியளிக்கிறார். விநாயகர், அனுமன்,கருடபகவான்,மலைமாகாளியம்மன்,பேச்சியம்மன், சப்தகன்னிமார் சன்னதிகளும் உள்ளன. சந்தான பாக்கியம் (குழந்தைபாக்கியம்) திருமணதடை க்கு இத்தலம் சிறப்பாகும். சந்தான பாக்கியத்திற்கு இங்கு வெண்ணெய் சாத்தி,தொட்டில் கட்டி வழிபடுதல் திருமண தடைக்கு ஜாதகம் துளசி மாலை வைத்து வழிபடுவது ஐதீகம்.மேலும் சனிக்கிழமை காலை பால்அபிஷேக பூஜையின்போது பகவானை நினைத்து காரியங்களுக்கு, பூ கேட்பது(கட்டுப்பூ) சிறப்பாகும். இக் கோவிலில் வீபூதி பிரசாதம் கொடுப்பது சிறப்பானதாகும். பழமைவாய்ந்த இக்கோவில் சித்தர் சர்க்கரை பகவான் என்னும் திருமலைசாமி பகவான் தென்முகம் நோக்கி வரும்போது தாடகைநாச்சி மலை வனப்பகுதியில் மலை காளியம்மனுக்கு யாக குண்டம் போட்டு வழிபட்டதாகவும் அப்போது சித்தரிடம் அப்பகுதியிலிருந்த பக்தர்கள் தங்களின் வாழ்வாதாரமான, விவசாயத்தொழில் செழுமையடைய வேண்டியும்,மாடுகளும், பசுக்களும் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு இறந்து விடுவதாக சித்தரிடம் வேண்டியதாகவும், நோய்நொடிகள் வராமல் இருக்கவேண்டும் என்று வேண்டியதற்கு,சித்தர் மலை காளியம்மனுக்கு கிழபுறம் முல்லை மரத்தடியில் மூன்று சுயம்பு மூர்த்திகள் இருப்பதாகக்கூறி, பசு மாடுகளுக்கு உகந்தவராகிய கண்ணபிரான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை ஸ்ரீ ருக்மணி ஸ்ரீசத்யபாமாவுடன் வழிபட்டு உங்கள் பசுக்களின் கறக்கும் பால் ஊற்றி, துளசி வைத்து வழிபடுங்கள் என்றும் பால் தீர்த்தத்தையும் யாக குண்டத்தில் இருந்த சாம்பலை விபூதி பிரசாதமாக வழங்கியதாகவும் ஐதீகம்.அதன்படி இன்றும் பக்தர்கள் தங்கள் தோட்டங்களும்,கால்நடைகளும் செழிக்க விபூதி தீர்த்தம் தெளித்து வழிபடுவது வழக்கம்.வரும் பக்தர்களுக்கு, வனஉயிரினங்களால் எந்த வகையிலும் துன்பம் தரக்கூடாது என்று ஒற்றை கொம்பு காட்டு யானையிடம் சத்தியம் வாங்கியதாகவும், சர்க்கரை பகவான் சித்தர் ஆணைக்கிணங்க அவருடன் யாத்திரை வந்த, லிங்கங்கட்டி பிராமண நாயக்கர்களை ஸ்ரீநந்தகோபால கிருஷ்ணனுக்கு பூஜைகள் கைங்கரியம் பார்க்குமாறு அருளாசி புரிந்தாகவும் அதன் வழியாக இன்றும் மலைபகுதியின் கீழ்ளுள்ள மஞ்சநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த லிங்கங்கட்டி கன்னடிய பிராமண நாய்க்கர் வம்சாவளியினர் கைங்கரியம் செய்துவருகின்றனர்.

Leave a Reply

When posting your links, remember to use the FULL video link like this: https://www.youtube.com/watch?v=TOb6ul-82Ms DO NOT use the shortened youtu.be links, they will sometimes not work.

X

When posting your links, remember to use the FULL video link like this: https://www.youtube.com/watch?v=TOb6ul-82Ms DO NOT use the shortened youtu.be links, they will sometimes not work.